உள்ளூர் செய்திகள்

மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா

Published On 2022-11-15 14:57 IST   |   Update On 2022-11-15 14:57:00 IST
  • மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது
  • மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயொன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மௌண்ட் சீயொன் சர்வதேச பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை வளர்க்கும் பொருட்டு உணவு திருவிழா நடைபெற்றது.

பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் ஜலாஜா குமாரி முன்னிலையில் ராபின்சன் தேவதாசன், ஸ்டாரி தேவதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியின் தலைவர்சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கி பொன்னாடையும், நினைவுப்பரிசும் வழங்கி கௌரவித்தார். இணைத்தலைவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற உணவுத் திருவிழாப் பற்றிய அறிக்கையை கூறியதுடன், கடந்த வருடம் உணவுத்திருவிழா வாயிலாக கிடைத்த நிதி எந்த ஆஸ்ரமங்களுக்கு வழங்கப்பட்டது , எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த அறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் தனது சிறப்புரையில் ஏழைக்கு உதவுகிறவன் கடவுளை மகிழ்ச்சியடைய வைக்கிறான் என்ற இறைவனின் வார்த்தைகளை கூறி பெற்றோர் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மாணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

உணவுத்திருவிழா தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விதவிதமான உணவினை சமைத்து விற்பனை செய்தனர். உணவுத் திருவிழாவில் மாணவர்களும், பெற்றோ ர்களும் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு நிகழ்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர் களும் இணைந்து செயல்பட்டனர். 

Tags:    

Similar News