உள்ளூர் செய்திகள்

அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம்

Published On 2023-01-02 12:07 IST   |   Update On 2023-01-02 12:07:00 IST
  • அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
  • விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை:

 பொன்னமராவதி அருகே உள்ள மேலச்சிவபுரியில் ஸ்ரீ சுவாமிநாத ஐயப்ப பக்தர்கள் அங்கு உள்ள சுவாமிநாத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். அதனை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது பயணத்தை தொடங்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக சபரிமலை பயணத்தை பக்தர்கள் தொடரவில்லை. தற்பொழுது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து செந்தில்குமார், சின்னையா குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்களது புனித பயணத்தை தொடங்கியுள்ளனர். அதனை முன்னிட்டு அங்கு நடைபெற்ற அன்னதான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News