உள்ளூர் செய்திகள்

கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் குப்பைகளை அகற்ற கோரிக்கை

Published On 2022-06-13 12:39 IST   |   Update On 2022-06-13 12:39:00 IST
  • கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • ஆலங்குடியில் இயங்கிவந்த உழவர் சந்தையை மீண்டும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் சந்தைப் பேட்டை பகுதியில் குவிந்து கிடக்கும் கழிவு குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்ட மாநாட்டில் தீர்மானம். நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம் கீரமங்கலத்தில் முன்னா ள் கிராம நிர்வாக அலுவலர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவன் பங்கேற்று இன்றைய அரசியல் எதிர்கால கடமைகள் குறித்து உரையாற்றினார்.

பின்னர் கூட்டத்தில் கீரமங்கலம் சந்தப்பேட்டையில் கழிவு குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து திருக்கட்டளை வேப்பங்குடி வழியாக ஆலங்குடி சென்று வந்த பேருந்து பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.உடனடியாக பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவரங்குளத்திலிருந்து காயாம்பட்டி சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலங்குடியில் இயங்கிவந்த உழவர் சந்தையை மீண்டும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைக்குறிச்சி திருவரங்குளம் வம்பன் 4ரோடு போன்ற பகுதிகளில் நடை பெறும் வாரச்சந்தைகளை ஊராட்சி நிர்வாகமே நடத்தும்வகையில் மாவ ட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .




Tags:    

Similar News