உள்ளூர் செய்திகள்

பயணிகளை ஏற்றுவதில் தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே மோதல்

Published On 2023-09-11 06:07 GMT   |   Update On 2023-09-11 06:07 GMT
  • புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் தனியார் பஸ் ஓட்டுனர்களிடையே மோதல் ஏற்பட்டது
  • போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அவ்வப்போது தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்க ளுக்கு இடையே நேரம் பின்பற்றி பயணிகளை ஏற்றி செல்வதில் வாக்கு வாதம் ஏற்படுவது வாடி க்கை யாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் இரண்டு தனியார் பேருந்து களின் நடத்துனர்கள் போட்டி ப்போட்டு பயணி களை ஏற்றினர்.

அதில் ஒரு பஸ் அரிமளம் தேனிப்பட்டி நோக்கியும், மற்றொரு பஸ் ராங்கியம் மெட்டு பகுதிக்கும் இயக்கப்பட்டது.

பின்னர் அந்த பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 2-வது நிறுத்தமான பழைய பேருந்து நிலைய பகுதியில் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி பயணிகளை ஏற்றினர்.

அப்போது இரு பேருந்து களின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் இரண்டு பேருந்துகளையும் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவ்வழியாகச் சென்ற மற்ற பேருந்துகள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.

ஆனால் அதைப்பற்றி கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி தகராறு செய்தனர்.

அப்போது பொறுமை இழந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தகராறு செய்த 2 பேருந்துகளின் நடத்துன ர்கள் மற்றும் ஓட்டுனர்களை தட்டி கேட்டனர்.

அதனை தொடர்ந்து அந்த பேருந்துகளின் டிரைவர்கள், பேருந்துகளை இயக்கி சென்றனர்.

இந்த தகராறு காரணமாக சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது போல் பயணிகளை ஏற்றி செல்வதில் தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இது போன்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் ே காரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News