உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

தேனி மாவட்டத்தில் அரசு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறியும் பணி

Published On 2023-04-13 05:33 GMT   |   Update On 2023-04-13 05:33 GMT
  • 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.
  • ஊராட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.

தேனி:

தேனி அருகே உள்ள கோவிந்தநகரம் ஊராட்சி க்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடை பெற்றது. இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்த தாவது:-

தமிழக அரசு மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், மாணவ, மாணவியர்களின் இடைநிற்றலை தவிர்த்திடும் பொருட்டு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தேர்வு எழுதுவதற்கான நட வடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்கள் ஒருவரும் இருக்ககூடாது. மேலும், மாணவ, மாணவி யர்களை தேர்வு எழுதுவற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தி னாலும் கூட பெற்றோர்க ளின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். 10-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவ, மாணவியர்களை கண்டறிவதற்கு வருகை தரும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும்.

ரேசன் கடைகளின் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்ட ப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசி யினை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரா ட்சிப்பகுதிகளில் கிராமப்புற மக்கள் சுற்றுப்புற பகுதி களை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திட வேண்டும்.

தற்போது, கொரோனா நோய்த் தொற்று மாவ ட்டத்தில் பரவலாக காணப்படுகிறது. காயச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகள் அறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் 218 பயனாளிகளுக்கு இ-சேவை மூலம் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

Tags:    

Similar News