உள்ளூர் செய்திகள்

பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம்

Published On 2023-02-10 14:39 IST   |   Update On 2023-02-10 14:39:00 IST
  • நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
  • இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார் தெரிவிக்கலாம்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார் தெரிவிக்கலாம். அதன்படி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில், வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டத்தில் நுகர்வோர் கலந்து கொண்டு பொது விநியோகம் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News