உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் துறை அலுவலர் முருகதாஸ் வழங்கினார்.

மயிலாடுதுறை ஆக்கூரில் 124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Published On 2023-05-11 09:51 GMT   |   Update On 2023-05-11 09:51 GMT
  • 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, திருமணம் தொகைக்கான ஆணை வழங்கினர்.
  • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

தரங்கம்பாடி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய்துறை அலுவலர் முருகதாஸ் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், சமூகநலத்துறை தாசில்தார் சுந்தரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் காந்திமதி வரவேற்றார்.

முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், தங்களது துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதன் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு விளக்கி எடுத்து கூறினர்.

தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர், 36 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 52 பயனாளிகளுக்கு இறப்பு, முதியோர் உதவி தொகை, திருமணம் தொகைக்கான ஆணை, 3 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டி, 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உபகரணங்கள் உள்பட 124 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர். முன்னதாக தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இதில் கால்நடை மருத்துவர் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, வி.ஏ.ஓ. கனேசன் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News