உள்ளூர் செய்திகள்
கவர்னரை கண்டித்து போராட்டம்சேலத்தில் 6 பேர் கைது
- தமிழக அரசு சட்டசபையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
- அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.
சேலம்:
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த சிலர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு சட்டசபையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடைக்கு ஒப்புதல் அளிக்காத, ஆளுநரை கண்டித்து சேலத்தில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் ஆளுநருக்கு சாம்பல் மற்றும் மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
இதற்காக சேலம் தலைமை தபால் நிலையத்திற்கு, மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில் நிர்வாகிகள் 6 பேர் வந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்புக்கு நின்ற டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் தபால் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.