உள்ளூர் செய்திகள்

அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஒட்டன்சத்திரம் அருகே திட்ட இயக்குனரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - பரபரப்பு புகார்

Published On 2023-09-01 10:53 IST   |   Update On 2023-09-01 10:58:00 IST
  • மயானத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி வருவதற்கு பொதுமக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
  • கட்டிடங்கள் கட்டும் பணியை பார்வையிட வந்த திட்ட இயக்குனரை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட பலக்கனூத்து ஊராட்சி இயங்கி வருகிறது. இங்கு ஊராட்சி நிர்வாகம் மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டி வருவதற்கு பொதுமக்கள் பல முறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால் அதன் வேலை பாடுகள் நடந்து வருகிறது. இதே போல தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராத சிலர் பெயரில் வேலைக்கு வந்தது போல் கணக்கு காட்டி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பணம் எடுத்து வருதல் போன்று இந்த ஊராட்சியில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்ற னர்.

இது குறித்து ரெட்டி யார்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை. இந்நிலை யில் பலக்கனூத்து அருகே தமிழக அரசு சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டும் பணியை பார்வையிட வந்த திட்ட இயக்குனர் பொன்னையாவை பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

இதையடுத்து முறைகேடு கள் குறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவை வாங்கிய திட்ட இயக்குனர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதியளித்ததின் பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News