உள்ளூர் செய்திகள்

சீர்காழியில், இறால் வளர்ப்பு சங்க கூட்டம் நடந்தது.

சீர்காழியில், இறால் வளர்ப்பு சங்க கூட்டம்

Published On 2023-02-20 12:35 IST   |   Update On 2023-02-20 12:35:00 IST
  • இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
  • மாசு கட்டுப்பாட்டு வாரிய பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறால் வளர்ப்பு சங்க கூட்டம் பைபாஸ் சாலையில் நடந்தது.

சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாண்டி பாலா மாநில பொருளாளர் கிரி மாநில துணை தலைவர்கள் சேதுராமன், சங்கர் பிள்ளை, இரவிப்பாண்டியண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

மாநில செயற்குழு கூட்டத்தில் இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் இறால் வளர்க்கும் உரிமையா ளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்த விலையில் தரமான இறால் தீவனம் வழங்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி மயிலாடுதுறை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஞானம் அரவிந்தன் சாய் பாஸ்கரன் கார்த்திகேயன் அக்பர் சேகர் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்லப்பா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், கடலூர் வெங்கடகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கலியபெரும்ள் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் சாய் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News