உள்ளூர் செய்திகள்

விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்தபடம்.

கோவில்பட்டியில் பூலித்தேவர் பிறந்த நாள் விழா

Published On 2022-09-02 09:15 GMT   |   Update On 2022-09-02 09:15 GMT
  • பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.
  • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

கோவில்பட்டி:

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307-வது பிறந்த நாள் விழா கோவில்பட்டி ரேவா பிளாசாவில் நடைபெற்றது.

விழாவில் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் செல்லத்துரை என்ற செல்வம் தலைமையில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாமன்னர் பூலித்தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி, பகத்சிங் ரத்ததானக் கழக அறக்கட்டளை நிறுவனர் காளிதாஸ் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தொழிலதிபர் அங்கமுத்து, நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, இந்திய கலாச்சார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், இன்னர்வீல் கிளப் பட்டயத் தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகர், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மேரிசீலா, உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்ட துணைச் செயலர் முத்துச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜன், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் தாவீதுராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலர் அன்புராஜ், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News