உள்ளூர் செய்திகள்

பக்தர் ஒருவர் கையில் முளைப்பாரி ஏந்தி பூக்குழி இறங்கிய காட்சி.

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

Published On 2023-05-06 09:05 GMT   |   Update On 2023-05-06 09:05 GMT
  • கோவில் திருவிழாவையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
  • 5-ந்தேதி மாலை தீர்த்தகுடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 4-ந் தேதி மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலையில் 508 திருவிளக்கு பூஜை, இரவில் சந்தனமாரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடைபெற்றது.

5-ந்தேதி மாலை நையாண்டி மேளம், டோலாக் நடனத்தோடு செண்டா மேளம் முழங்க தீர்த்தகுடம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரவில் வில்லிசை மற்றும் கரகாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நள்ளிரவில் சந்தனமாரியம்மன் சப்பர வீதிஉலா நடைபெற்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) காலை பூ வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி, அக்கினி சட்டி எடுத்து நையாண்டி மேளம், செண்டா மேளம் முழங்க பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை தேவர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News