உள்ளூர் செய்திகள்

போலீசார் அதிரடி சோதனை கடலூர் மாவட்டத்தில் 1465 மது பாட்டில்கள், சாராயம் பறிமுதல்: 127 பேர் கைது

Published On 2023-01-18 09:56 GMT   |   Update On 2023-01-18 09:56 GMT
  • கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
  • 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை விழா கோலகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இதனையொட்டி புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுபானங்கள் கடத்த ப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க புதுவை மாநில எல்லையோரங்களில் உள்ள 8 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், மாவட்டம் முழுவதும் மது விலக்கு போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். இதில் போகிப் பண்டிகை முதல் காணும் பொங்கல் வரை அதாவது 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மது கடத்தல், மது விற்பனை செயலில் ஈடுபட்ட 127 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 188 லிட்டர் சாராயம், 1465 மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. ஆற்று திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு மதுக்கடத்தலை தடுப்பதற்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News