உள்ளூர் செய்திகள்

ரவணசமுத்திரம் ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

Published On 2023-10-26 08:47 GMT   |   Update On 2023-10-26 08:47 GMT
  • பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிகை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குட் ஷப்பர்ட் பள்ளி மாணவ-மாணவிகளால் நடத்தப்பட்டது.

பின்னர் தெரு தெருவாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது உசேன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராமலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கோமதி பரமசிவன், மொன்னா முகம்மது இர்சாத், முகைதீன் அப்துல் காதர், பள்ளி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News