உள்ளூர் செய்திகள்

சாலை விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு

Published On 2022-06-10 12:14 IST   |   Update On 2022-06-10 12:14:00 IST
  • சாலை விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்:

திருநெல்வேலி மாவட்டம், நான்குநேரி வட்டம், ராஜபுதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் பிரவீன் (25). இவா், கடந்த 10 நாள்களாக பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு அருகேயுள்ள வினோத் என்பவரது வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி காலை நான்குச் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரவீன் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News