உள்ளூர் செய்திகள்
காரை கிராமத்தில் கோயில் நிலம் மீட்பு
- காரை கிராமத்தில் கோயில் நிலம் மீட்க்கப்பட்டது
- பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலதி கோயிலுக்கு சொந்தமான 90 சென்ட் நிலமும், ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தன், தனி தாசில்தார் பிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் விஏஓ, சர்வேயர் ஆகியோருடன் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேலும் அந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடமாகும், இந்த நிலத்தில் தனிநபர் எவரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, மீறி ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பேனர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.