முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கூட்டம்
- முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- பதவி உயர்வு, பணி மாறுதலில் பழைய முறை ஆகியன வலியுறுத்தி தீர்மானம்
பெரம்பலூர்,
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் தமிழ்மணியன், மாநில பொருளாளர் கணேஷ், மாநில செய்தி தொடர்பு செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பணி உயர்வு , பதவி மாறுதலில் பழைய முறைப்படி 44 ஆண்டுகள்அளவில் உள்ளபடி பட்டியலில் பதவி உயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களையும் இணைத்து வெளியிட அரசாணையை திருத்தி கொள்ள முடிவெடுக்கவேண்டும் , ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓயவூதியம் வழங்கவேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியலில பதவி உயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை அனுமதித்து பணபலன்களை வழங்கிடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில, மாவட்ட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் மணி நன்றி கூறினார்.