விடுதலை சிறுத்தைகள் ஆலோசனை கூட்டம்
- பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் நிர்வாக குழு ஆலோசனை கூட்டம்
- அனைத்து கிராமங்களிலும் நலத்திட்ட உதவிகள்வழங்கிட தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குமாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார்ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பிச்சைப்பிள்ளை, வெற்றியழகன், இடிமுழக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் வீரசெங்கோலன், எம்பி தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன், மண்டல துணை செயலாளர்லெனின் ஆகியோர் பேசினர்.நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் தலித் பள்ளி மாணவனை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்துநாளை (15ம்தேதி) பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும் 17ம்தேதி கட்சி தலைவர் தொல்.திருமாளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் அனைத்து கிராமங்களிலும் நலத்திட்ட உதவிகள்வழங்கி கொண்டாடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நகர செயலாளர்தங்கசண்முகசுந்தரம் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.