உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

Published On 2022-10-19 13:02 IST   |   Update On 2022-10-19 13:02:00 IST
  • பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்துள்ளது
  • பணிக்கு சென்றிருந்த போது ஏற்பட்ட சம்பவம்

பெரம்பலூர்:

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மனைவி செல்வி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். செல்வி தனது பிள்ளைகளுடன் நேற்று இரவு அதே ஊரில் உள்ள தந்தை வீட்டிற்கு உறங்குவதற்காக சென்றுள்ளார். அவரது கணவர் தர்மராஜ் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிய இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

பணியை முடித்துவிட்டு தர்மராஜ் வீட்டிற்கு வந்த போது, வீட்டில் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் தையல் மெஷினை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து. சிசிடி கேமரா ஆதாரங்கள் மற்றும் தடயங்களை வைத்து திருடி சென்ற நான்கு பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News