3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி
- 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது
- நெடுஞ்சாலை துறை மூலம் நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை மூலம் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவை அழகுபடுத்தும் பணிகள் மற்றும் மரக்கன்று நடுதல் பணி நேற்று துவங்கியது. கோனேரிபாளையம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பகுதியில் நேற்று மரக்கன்று நடுதலை நெடுஞ்சாலை துறை பெரம்பலூர் கோட்ட பொறியாளர் கலைவாணி தொடங்கிவைத்தார்.
இதே போல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் வண்ண பூக்கள் செடிகளை நட்டுவைத்தார்.
பின்னர் கோட்ட பொறியாளர் பேசுகையில், துறைமங்கலம், நான்குரோடு, துறையூர் சாலை, ஆத்தூர் சாலை, அரியலூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலக்கரை ரவுண்டானாவை அழகு படுத்தும் விதமாக பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூக்கும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளது. மேலும் பெரம்பலூர் -துறைமங்கலம் 3 ரோடு பகுதியிலிருந்து பாலக்கரை வரைஉள்ள சாலை சென்டர் மீடியனில் பல்வேறு வகையான வண்ண பூக்கள் பூச்செடிகள் நடப்படவுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் மாயவேல், உதவி பொறியாளர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.