உள்ளூர் செய்திகள்

மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா பேசியபோது எடுத்த படம்.

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் நோயாளிக்கு, 6 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை

Published On 2023-03-26 15:30 IST   |   Update On 2023-03-26 15:30:00 IST
  • இந்த அறுவை சிகிச்சைக்கு மற்ற தனியார் மருத்துவமனைகளில் ரூ 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும்.
  • முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

ஓசூர்,

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் குழு, விபத்தில் கால் செயலிழந்த நோயாளி ஒருவருக்கு 6 மணி நேரத்திற்குள் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இது தொடர்பாக, மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சசிதரன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயதான, கம்பி வளைக்கும் கட்டிட தொழிலாளி ஒருவர், கடந்த 21-ந்தேதி, பணியிடத்தில், சுமார் 30 அடி உயர கட்டிடத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு பகுதியில் பலத்த காயமடைந்தார். இரு கால்களின் பலவீனத்துடன் இருந்த அவர், 2 மணி நேரத்தில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, அங்கு அவருக்கு எனது தலைமையிலான மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். மேலும் தற்போதைய அமெரிக்க முதுகுத்தண்டு காயங்கள் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி, அவரது உயிர் நிலைகள் நிலைப்படுத்தப்பட்டு, பின்னர் அவசர முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து 6 மணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முதுகுத்தண்டுவடத்தின் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது முதுகுத்தண்டுவடத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது, அறுவை சிகிச்சையில் அது நிவர்த்தி செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. நோயாளி பக்கவாதத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து அன்றுமாலை 6 மணியளவில் நடக்க வைக்கப்பட்டார். முதுகுத்தண்டு வட முறிவு ஏற்பட்ட 6-12 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யும்போது குணமடையும் வாய்ப்புகள் அதிகம். இந்த அறுவை சிகிச்சைக்கு மற்ற தனியார் மருத்துவமனைகளில் ரூ 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை செலவாகும். ஆனால் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் ரூ.50,000 முதல் 1 லட்சம் வரைதான் செலவாகும். அனைத்து வசதிகளும் கொண்ட இந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, நோயாளிகள் சிகிச்சை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். அப்போது, ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி தாளாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை, மருத்துவ இயக்குனர் ராஜா முத்தையா, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக், மருத்துவ அலுவலர் டாக்டர். பார்வதி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News