உள்ளூர் செய்திகள்

உடுமலை பெண் கொலையில் பெயிண்டர் கைது

Update: 2022-12-05 10:33 GMT
  • பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவனுக்கு காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
  • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்டுள்ளான்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி தனா என்கிற தனலட்சுமி (வயது 40). சற்று மனநிலை பாதிக்கப்பட்ட இவர் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தபோது கொடூரமாக தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி கொலையாளியான உடுமலை ஏரிப்பாளையம் சேரன் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவரின் மகன் ஆரோக்கிய தாஸ் (31) என்பவரை கைது செய்தனர்.

பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவனுக்கு காதல் திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவன் புக்குளம் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளான். சம்பவத்தன்று நள்ளிரவில் ஆரோக்கியதாஸ் புக்குளம் பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த தனலட்சுமியின் தலையில் கல்லால் தாக்கி கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏரிப்பாளையம் லட்சுமி நகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆரோக்கியதாஸ் சம்பந்தப்பட்டுள்ளான். அத்துடன் மேட்டுப்பாளையத்தில் ரெயிலில் சங்கிலி பறித்த வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இவன் மீது உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணைத் தாக்கி விட்டு டி.வி.யை திருடியதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கைதான ஆரோக்கியதாசை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆரோக்கியதாஸ் பெண்கள் என்றாலே ஒரு வித வெறுப்புடன் செயல்பட்டுள்ளான். சைக்கோவாக செயல்பட்ட அவன் குறிப்பாக பெண்கள் யாராவது தனியாக இருந்தால் அவர்களை முதலில் சரமாரி தாக்குவதுடன் அவர்களிடம் உள்ள பணம், நகைகளை பறித்துள்ளான். சிலரை பலாத்காரமும் செய்துள்ளான். அது போல் கடந்த 2 வருடத்திற்கு முன்பு தனியாக இருந்த மூதாட்டியை அடித்துக்கொன்று கற்பழித்துள்ளான். தற்போது உடுமலை புக்குளம் பஸ் நிறுத்தத்தில் தனியாக இருந்த மனநிலை பாதித்த பெண் தனலட்சுமியை தலையில் அடித்துக்கொன்று பலாத்காரம் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News