உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட 110 ஏக்கர் நெற்பயிரை அதிகாரிகள் பார்வையிட்டனர்

Published On 2023-04-01 13:12 IST   |   Update On 2023-04-01 13:12:00 IST
  • கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

பொன்னேரி:

கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறுவட்ட சேரி, ஏனோதி மேல்பாக்கம், சின்னசோழியம்பாக்கம், பெரியசோழியம் பாக்கம், ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட 110 ஏக்கர் நெற்பயிரில் மஞ்சள் குருத்து புழு மற்றும், பச்சை பாசி வளர்ச்சியினால் பயிர்களின் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் துணை இயக்குனர் தேவேந்திரன், திருவள்ளூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் துறை துணை பேராசிரியர் விஜயசாந்தி, பொன்னேரி வேளாண் துணை இயக்குனர் டில்லி குமார், ஆய்வாளர் உமா ஆகியோர் நேரில் சென்று பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தனர். பின்னர் மஞ்சள் குருத்து பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News