உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்டம்

Published On 2022-12-31 15:47 IST   |   Update On 2022-12-31 15:47:00 IST
  • சேக்கண்டஅள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
  • கோவில் தூய்மை செய்யப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவப்பட்டது.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சேக்கண்டஅள்ளியில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் ஸ்ரீ ராம் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன், ஊராட்சி ஒன்றிய தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மதியழகன், வார்டு கவுன்சிலர்கள் சுரேஷ், சபரி, மற்றும் திட்ட அலுவலர்கள் தமிழரசன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இப்பணித்திட்டத்தில் முள்புதர், விளையாட்டு மைதானம் மற்றும் அருகில் உள்ள கோவில் தூய்மை செய்யப்பட்டு, மழைநீர் சேகரிப்பு தொட்டி நிறுவப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சுற்றுசுவர் தூய்மை செய்து சுற்றுச்சுவருக்கு வெள்ளை அடிக்கப்பட்டு கிராமம் தூய்மை செய்யப்பட்டது.

நிறைவு விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், முகாமை நேரில் பார்வையிட்டு இத்திட்டம் சிறப்பாக நடத்திய மாணவர்களை உற்சாகப்படுத்தி கவுரவப்படுத்தினார்.

பள்ளி ஆய்வாளர் பொன்னுசாமி, மாவட்ட திட்ட அலுவலர் சக்திவேல் மற்றும் ஸ்ரீ ராம் பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள், முதல்வர்கள், மற்றும் திட்ட அலுவலர்கள், பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News