உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆா்ப்பாட்டம் நடத்திய டாக்டர்கள். 

கூடுதல் நேரம் பணியாற்ற உத்தரவுக்கு எதிா்ப்பு நாமக்கல்லில் அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-09 07:15 GMT   |   Update On 2022-08-09 07:15 GMT
  • அரசு ஊழியா்களின் 40 மணி நேர பணிக்காலம் என்பது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சாா்பில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்:

கடந்த 2009-ல் தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் கோரிக்கையானது அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவால் ஏற்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில் அரசு டாக்டர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு டாக்டர்கள் பணி நேரம் காலை 9 மணிக்கு மாறாக காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும் என்று சமீபத்தில் புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் நெடுந்தொலைவில் இருந்து வரும் டாக்டர்கள் சரியான நேரத்திற்கு வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அரசு ஊழியா்களின் 40 மணி நேர பணிக்காலம் என்பது 48 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சாா்பில் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜி.அருள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தயாசங்கர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இதில், 80-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News