உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கிய போது எடுத்த படம்.

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்

Published On 2023-02-25 13:08 IST   |   Update On 2023-02-25 13:08:00 IST
  • வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரிய பட்டியில் நடைபெற்றது.
  • கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

குடிமங்கலம் :

குடிமங்கலம் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆணைக்கிணங்க குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் தலைமையில் பெரியபட்டியில் நடைபெற்றது.

இதையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பெரியபட்டியில் கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

பெரியபட்டி அரசு பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் செல்வக்குமார், ரவி பிரபு, சதாசிவம், மகேந்திரன் ,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News