உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை கடுமையாக்கி புதிய குவாரிகளை அனுமதிக்க வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வலியுறுத்தல்

Published On 2022-09-09 13:20 IST   |   Update On 2022-09-09 13:20:00 IST
  • கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது என்று முன்னாள் எம்.எல்.ஏ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  • அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை என ரவி அருணன் கூறியுள்ளார்.

கடையம்:

தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்குவாரிகள்

கல் குவாரிகள் நடத்துவதற்கு அரசு ஏராளமான விதி முறைகளை வகுத்துள்ளது.

இந்த விதிமுறைகள் கனிம வளங்களை பாதுகாக்க மட்டுமல்ல அந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டவை.

அனுமதி கேட்டு

நெல்லை மாவட்டத்தில் விதிகளை மீறிய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அது தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய குவாரிகள் தொடங்க ஏராளமான விண்ணப்பங்கள் அனுமதி கேட்டு காத்து கொண்டிருக்கின்றன.

கடுமையாக நிபந்தனை

எனவே அவற்றை பரிசீலனை செய்து கடுமை யான நிபந்தனை விதித்து அவை இயங்குவதற்கு அனுமதி அளித்தால் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் தற்போது நிலவும் கனிமவள தட்டுப்பாடும் நீங்கும்.

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங் களுக்கு கனிம வளம் கடத்தப் படுவதை தடுத்தாலே கனிம பொருட்களின் விலை வெகுவாக குறையும்.

எச்சரிக்கை

ஏற்கனவே தவறு செய்தவர்களின் குவாரிகள் மூடப்படுமாயின் அது மற்ற குவாரிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். விதிகளை மீறி குவரிகளை இயக்கியதால் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் யாரும் அபராதத்தை செலுத்தவில்லை.

மேலும் தங்களது உறவினர்கள் பெயர்களில் வேறு புதிய குவாரிகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே புதிய குவாரி உரிமம் வழங்கும் போது அவர்களின் பின்புலத்தை ஆராய வேண்டும.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  

Tags:    

Similar News