உள்ளூர் செய்திகள்

6 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை: ஒன்று திரண்டு மனு அளித்த தலைமைச் செயலக ஊழியர்கள்

Published On 2022-09-13 12:33 GMT   |   Update On 2022-09-13 12:33 GMT
  • தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய பதவிகளில் 600 பேர் பணியாற்றுகின்றனர்.
  • ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் தெரிவித்தார்.

சென்னை:

தலைமைச் செயலக தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி 75 பேர் மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

தலைமைச் செயலகத்தில் தட்டச்சர், உதவியாளர் மற்றும் தனி அலுவலர்கள் ஆகிய பதவிகளில் சுமார் 600 பேர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு 6 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில், இன்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர் தெரிவித்தார். அவரது பதிலுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். தலைமைச் செயலக பணியாளர்கள் திடீரென திரண்டு வந்து மனிதவள மேலாண்மைத்துறை செயலாளரை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News