உள்ளூர் செய்திகள்

பண்ணை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கூலி பணியாளர்களின் வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது - தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தல்

Published On 2023-03-09 10:15 GMT   |   Update On 2023-03-09 10:15 GMT
  • கூலி பணியாளர்களின் வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது என தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
  • தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு அரசு ஏ.ஐ.டி.யூ.சி பண்ணை தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. பண்ணை சங்க மாநில பொது செயலாளர் அரசப்பன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், அரசு வேளாண்மை துறை பண்ணைகளில் தின கூலியாக பணிபுரிபவர்களை வயதை காரணம் காட்டி வேலை மறுக்க கூடாது.

தற்போது இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதால் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு தொடர்ந்து இவர்கள் வேலை பார்த்து வரும் பண்ணைகளில் பணிபுரிய பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் செய்ய வேண்டுமென்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதில் தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ராதா, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் கோவிந்த ராஜன், மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், சங்க நிர்வாகிகள் பானுமதி, குணசேகரன், பருத்திவேல், வெள்ளைச்சாமி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News