உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே புதிய தபால் அலுவலகம் தொடக்கம்

Published On 2023-07-18 11:45 IST   |   Update On 2023-07-18 11:45:00 IST
  • புதிய தபால் அலுவலகத்தை தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
  • தபால் அலுவலகம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும்.

தாம்பரம் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட திருவள்ளூர், பொன்னேரி தாலுக்காவில் உள்ள உத்தண்டி கண்டிகை கிராமத்தில் வசிக்கும் லட்சுமி நாராயணா கோவில் தெருவில் புதிய தபால் அலுவலகத்தை தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் மேஜர் மனோஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த தபால் அலுவலகம் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படும். இங்கு சாதாரண தபால், பதிவு தபால், விரைவு தபால் மணியார்டர் சேவை, அஞ்சலக சேமிப்பு காப்பீட்டு சேவை, தொடர் வைப்புக் கணக்கு, நிரந்தர வைப்புக் கணக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டங்கள் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது. இந்த கிளை தபால் அலுவலகம் 601204 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் உத்தன்டிகண்டிகை, ஆத்தேரய மங்கலம், சிங்கிளிமேடு, கோடூர் ஆகிய கிராமங்களுக்கு தபால் பட்டுவாடா செய்ய உள்ளது.

Tags:    

Similar News