உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

போக்சோ வழக்குகளின் நிலை குறித்து அறிய புதிய வசதி

Published On 2022-09-25 06:21 GMT   |   Update On 2022-09-25 06:21 GMT
  • பாலியல் குற்றவழக்குகள் குறித்து வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரியபடுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத் தர நல்ல வாய்ப்பாக உள்ளது என்பதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தேனி:

தேனி மாவட்ட காவல் துறை சார்பில் விடுக்கப்ப ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய நீதி கிடைக்க அனைத்து முயற்சிகளையும் காவல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் அதிக கவனத்துடன் கையாளப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம், நிதி மற்றும் இடைக்கால நிவாரணம் ஆகியவற்றை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தருகிறது.

மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு பிணை மனு தாக்கல் செய்து கோர்ட்டு விசாரணைக்கு வரும் போது பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்பதை எடுத்துரைத்து கடும் ஆட்சேபணை தெரிவித்து அவர்கள் வெளியே வராதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலியல் குற்ற வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது அதன் நிலை பற்றி அறிந்து கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் வாட்ஸ்அப் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் தெரியபடுத்தும் முறை அறிமுகப்படு–த்தப்பட்டுள்ளது. இந்த முறையை தொடர்ந்து கண்காணிக்கவும்,

செய்லபடுத்தவும் மாவட்ட எஸ்.பி. மேற்பார்வையில் ஒரு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எந்த நிலையில் உள்ளது? என்பதை அறிந்து கொண்டு விழிப்புடன் இருக்கவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத் தர நல்ல வாய்ப்பாக உள்ளது என்பதால் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News