உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே காட்டு பன்றிகளை சுட துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் -விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-09-05 14:59 IST   |   Update On 2022-09-05 14:59:00 IST
  • விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா மற்றும் விளக்க கூட்டம் நடந்தது.
  • காய்ந்து போன மா மரங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த குரும்பட்டி கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்க கிளை தொடக்க விழா மற்றும் விளக்க கூட்டம் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றிவைத்து பேசினார்.

கூட்டத்தில் குரும்பட்டி கிராமத்திற்கு பகுதி நேர ரேஷன் கடை அமைத்து கொடுக்க வேண்டும். சாக்கடை கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். விவசாய விளை பொருள்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை சுட அரசு துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும்.

அரசு நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குரும்பட்டியில் இருந்து திம்மராயன் கொட்டாய் கிராமத்திற்கு தார்சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். பருவம் தவறி காய்ந்து போன மா மரங்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

காய்ந்து போன தென்னை மரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட ஆலோசகர் நசீர் அகமத், பொருளாளர் சுப்பிரமணி ரெட்டி, மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகர், ராஜா, மாரியப்பன்,கிளை துணைத்தலைவர் கிருஷ்ணன், செயலாளர் தன்ராஜ், துணை செயலாளர் திப்பன், பொருளாளர் சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News