உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகேநிலத்தகராறில் மோதல்; 3 பேர் கைது
- நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள சுண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜ்க்கு சுமார் 7 அரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் சம்மந்தமாக மகன்கள் 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக 3 பேரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேஷ், உதயகுமார், சுபாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.