உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே 72 மூட்டை ரேசன் அரிசி கடத்தல்- டிரைவர் கைது

Published On 2022-11-28 08:20 GMT   |   Update On 2022-11-28 08:20 GMT
  • வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது.
  • போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் சமீபகாலமாக லாட்டரி சீட்டு விற்பனை, கஞ்சா, ஹான்ஸ் மது பாட்டில் உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோதமான செயல்கள் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா அதிரடி நடவடிக்கையில் முற்றிலுமாக குறைந்து வருகிறது.இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்திற்கு வேன் மூலம் ரேசன் அரிசி கடத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

இதனை அடுத்து அவரது உத்தரவின் பேரில் வளத்தி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இன்று காலை செஞ்சியில் இருந்து சேப்பட்டு நீலாம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைப் பார்த்த போலீசார் உடனே வேனை மறித்து அதில் சோதனை செய்தனர். இதில் வேனில் சட்ட விரோதமாக அனுமதியின்றி ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவது தெரியவந்தது. உடனே போலீசார் வேனை ஓட்டி வந்த டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கீழ்ரவளந்தவாடி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 32) டிரைவர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் இது குறித்து விழுப்புரம் குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தியை ஒப்படைத்தனர்.இது குறித்து குடிமை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த ரேஷன் அரிசி யார் மூலம் எங்கு கடத்த ப்பட்டுள்ளது மேலும் இந்தக் கடத்தலுக்கு தொடர்பா னவர்கள் யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News