உள்ளூர் செய்திகள்
தேசிய விவசாயிகள் தினம்: உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளை போற்றி வணங்குவோம்-டி.டி.வி.தினகரன்
- விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
"உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது" என்ற வரிகளுக்கு ஏற்ப வரவு-செலவு பார்க்காமல் உழுவதையும், உழைப்பதையுமே தன் வாழ்நாள் பணியாக கொண்டிருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் எனது தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மழை, புயல், வெள்ளம், வறட்சி என எத்துனை பேரிடர்களை சந்தித்தாலும் தங்களின் கடின உழைப்பின் மூலம் உலகிற்கே உணவளிக்கும் மகத்தான சேவையில் இடைவிடாது ஈடுபட்டுவரும் விவசாயப் பெருமக்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.