உள்ளூர் செய்திகள்

பிரம்மநாயகம்.


தென்காசி வ.உ.சி. வட்டார நூலகருக்கு தேசிய விருது

Published On 2022-09-28 08:51 GMT   |   Update On 2022-09-28 08:51 GMT
  • சமூக முன்னேற்றத் திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப்பான சாலிஸ், ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக செயலாற்றி வரும் நூலகர்களுக்கு டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் என்ற விருதை வழங்கி வருகிறது.
  • 2020-ம் ஆண்டிற்கான டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருதிற்கு தென்காசி வ.உ.சி. வட்டார நூலக நூலகர் பிரம்மநாயகத்தை சாலிஸ் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது.

தென்காசி:

சென்னையில் செயல்பட்டு வரும் சமூக முன்னேற்றத் திற்கான நூலக தகவல் அறிவியல் அமைப்பான சாலிஸ், ஆண்டுதோறும் மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் சிறப்பாக சேவையுடன் செயலாற்றி வரும் நூலகர்களுக்கு டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் என்ற விருதை வழங்கி வருகிறது.

2020-ம் ஆண்டிற்கான டாக்டர் வெங்கிடுசாமி தேசிய நல்நூலகர் விருதிற்கு தென்காசி வ.உ.சி. வட்டார நூலக நூலகர் பிரம்மநாயகத்தை சாலிஸ் நிறுவனர் டாக்டர் ஹரிகரன் தலைமையிலான தேர்வுக்குழு தேர்ந்தெடுத்து உள்ளது.

இவ்விருது அடுத்த மாதம் 14-ந்தேதி திருசெங்கோட்டில் நடைபெறும் தேசிய மாநாட்டில் வழங்கப்பட உள்ளது.


தமிழக அரசின் மாநில நல்நூலகர் விருதினை கடந்த 1994-ம் ஆண்டும், 2002-ம் ஆண்டு நல்நூலகர் விருதினையும் பிரம்மநாயகம் பெற்றுள்ளார்.

மேலும் நூலக வளர்ச்சிப் பணிகள், போட்டிதேர்வு, மாணவர்களுக்கு இலவச பயிற்சி தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள், புத்தக கண்காட்சி, நூலக வாரவிழாக்கள் உள்ளிட்ட நூலக வளர்ச்சிப் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கிடும் வகையில் தற்போது அவரை தேர்வு செய்துள்ளனர்.

பிரம்மநாயகத்திற்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், கண்காணிப்பாளர் சங்கரன், ஆய்வாளர் கணேசன், நூலகர்கள் சுந்தர், ஜீலியாராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, வாசகர் வட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சேகர், துணைத்தலைவர்கள் அருணாசலம், மைதீன், மயிலேறும் பெருமாள், நிர்வாகிகள் சலீம்முகம்மதுமீரான், குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags:    

Similar News