உள்ளூர் செய்திகள்

விழாவில் கதக் நாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடினர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் 2-ம் நாளாக நாட்டியாஞ்சலி

Published On 2023-02-18 09:17 GMT   |   Update On 2023-02-18 09:17 GMT
  • மாயூரநாதர் பெரிய கோவிலில் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.
  • மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தரங்கம்பாடி:

மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை ஷண்முகா நாட்டியப்பள்ளி குழுவினர், பெங்களூரு வைஷ்ணவி நாட்டியஷாலா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ஸ்ரீ சாய் ந்ருத்யாலயா குழுவினரின் வள்ளலார் அருள் பெருஞ்ஜோதி நாட்டிய நாடகம் நடைபெற்றது.

சிங்கப்பூர் கதக்கர்ஸ் கதக் குழுவினரின் சிவனும் பார்வதியும் உலகை உருவாக்குதல் கதக் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோன்று சிதம்பரம் மஞ்சுபாஷினி, சாருவர்தினி குழுவினர் மற்றும் பெங்களூரு விந்தியா அகாடமி குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இதில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், கலை ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News