உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கியவரின் பணத்தை உறவினரிடம் ஒப்படைப்பு

Published On 2023-09-23 14:56 IST   |   Update On 2023-09-23 14:56:00 IST
  • ஆதவன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.
  • விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

நாமக்கல்

ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன் (36)கூலி தொழிலாளி. இவர் பெரியமனலியில் இருந்து திருச்செங்கோடு நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது கொன்னையர் பஸ் நிலையம் அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சுயநினைவின்றி இருந்துள்ளார்.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மருத்துவ உதவியாளர் மணிவேல் ஓட்டுநர் கங்காதரன் ஆகியோர் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சுயநினைவின்றி இருந்த ஆதவனை பரிசோதித்த போது அவரிடம் இருந்த ரூ.80 ஆயிரத்து 55 பணத்தை எடுத்து ஆதவனின் உறவினர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை ஆதவனின் உறவினர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News