உள்ளூர் செய்திகள்

வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370-க்கு ஏலம்

Published On 2023-09-23 15:00 IST   |   Update On 2023-09-23 15:00:00 IST
விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளி பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறு நெல்லி கோவில், திருமால் கவுண்டம்பாளையம் ,கபிலர்மலை, வடகரையாத்தூர்,ஆனங்கூர் , அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிர் செய்துள்ளனர். இவர்கள் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளை பரமத்தி வேலூர் வெங்க மேட்டில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு விற்பனை கூடத்திற்கு கொண்டு சென்றும் விற்பனை செய்து வருகின்றனர்.மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் 7 ஆயிரத்து 474 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.69 -க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.06 - க்கும், சராசரியாக ரூ.23.30-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 82- க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.அதேபோல் 10 ஆயிரத்து 248 கிலோ தேங்காய் பருப்பு ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 75.89- க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 53.33- க்கும், சராசரி விலையாக ரூ. 68.88- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 74 ஆயிரத்து 288- க்கு ஏலம் நடைபெற்றது. ஒரே நாளில் சந்தையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகள் ரூ.10 லட்சத்து 43 ஆயிரத்து 370- க்கு விற்பனையானது.

Tags:    

Similar News