உள்ளூர் செய்திகள்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

Published On 2023-09-26 15:04 IST   |   Update On 2023-09-26 15:04:00 IST
  • பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்
  • 10 பயனாளிகளுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கை கள் குறித்து மொத்தம் 541 மனுக்களை மாவட்ட கலெக்ட ரிடம் வழங்கி னார்கள். மனுக்க ளைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், மனுக்களை பரிசீலனை செய்து, உரிய அலுவலர்க ளிடம் வழங்கி அவற்றின் மீது விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென உத்தர விட்டார்.நிகழ்ச்சியில் தாட்கோ மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.29.72 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் மொத்தம் ரூ.12,000 மதிப்பில், 2 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டி, கூட்டுறவுத் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.27 லட்சம் மதிப்பில் வட்டியில்லா பயிர் கடனு தவி, 1 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் வருவாய் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா, என மொத்தம் 10 பயனாளி களுக்கு ரூ. 38.11 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News