உள்ளூர் செய்திகள்

501 திருவிளக்குகளை கொண்டு வந்து பூஜை செய்தபோது எடுத்த படம்.

501 திருவிளக்கு பூஜை

Published On 2023-08-02 08:07 GMT   |   Update On 2023-08-02 08:07 GMT
  • பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பரமத்தி வேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் கிராமத்தில் அமைந்துள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் பெண்கள் 501 திருவிளக்கேற்றி மகாலட்சுமி பூஜை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் பூஜை, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.

உலக மக்கள் அமைதி வேண்டியும், மாணவர்கள் கல்வி செல்வம் பெருகவும், மாதம் மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையின் போது புரோகிதர்கள் பக்தி பாடல் பாடிய போது திருமணமான பெண்கள், இளம் பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். அவர்களை உறவினர்கள், கோவில் பூசாரிகள், திருநீர், எலுமிச்சம்பழம் கொடுத்து அமைதிபடுத்தினர். இந்த பூஜையில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News