உள்ளூர் செய்திகள்

நாளந்தா பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் சாதனை

Published On 2023-10-18 15:03 IST   |   Update On 2023-10-18 15:03:00 IST
  • மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
  • 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கொங்கு சகோதயா சார்பில் கடந்த 14-ந் தேதி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப் பாளையத்தில் உள்ள வெங்க டேஸ்வரா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நாளந்தா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் தனிநபர் பிரிவில் 2 பேர் முதலிடமும், மாணவிகள் பிரிவில் 3 பேர் 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான தொடர் நீச்சல் 200 மீட்டர் பிரிவில் 2-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ப்ரீ ஸ்டைல் 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 12 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x25 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான 4x50 மீட்டர் பிரிவில் 3-ம் இடமும் பிடித்தனர். மொத்தமாக 2 தங்கம், 4 வெள்ளி, 21 வெண்கலம் என 27 பதக்கங்களை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சாதனை புரிந்த மாணவர் களை பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் முண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வழக்கறிஞர் கவுதமன், மருத்துவர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Similar News