நாகர்கோவில், வேப்பமூடு டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.
நாகர்கோவில், அக்.27-
நாகர்கோவில் வேப்பமூட்டில் மாநகராட்சி பூங்கா உள்ளது.
டிரான்ஸ்பார்மரில் தீ
பூங்காவின் பின் பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் தீ பொறிகள் கிளம்பி தீ பிடித்தது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் அலறியடித்தபடி நாலா புறமும் ஓடினர்.
இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
காரணம் என்ன?
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்களும் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
காற்றின் வேகம் காரணமாக வயர்கள் உரசியதில் தீ பிடித்து இருக்கலாம் என மின்வாரிய ஊழியா்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.