மேட்டூர் அருகே தொடர்ந்து அட்டகாசம் செய்யும் மர்ம விலங்கு
- நங்கவள்ளி அருகே கந்துகா ரன் காடு பகுதியை சேர்ந்த வர் மாரியப்பன் (வயது 70). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆடுகளை மேய்த்துவிட்டு அவரது வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே கந்துகா ரன் காடு பகுதியை சேர்ந்த வர் மாரியப்பன் (வயது 70). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்த்துவிட்டு அவரது வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு காலை வந்து பார்த்தபோது மர்ம விலங்கு கடித்து குதறியதில் 13 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி மாரி யப்பன் உடனடியாக வனத்து றைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சம் எனவும், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து இறந்து போன ஆடுகள் கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகு தியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் கொளத்தூர் அருகே தார்க்காடு பகுதியை சேர்ந்த விவசாயி குஞ்சப்பன் என்பவருக்கு சொந்தமான 10 வெள்ளாடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்தது. தொடர்ச்சியாக கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி பகுதிகளில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்து வரும் சம்பவம் விவசாயிகளி டையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது.
ஆடுகளை கடித்து கொல்லும் மர்ம விலங்கு எது? வெறி நாயா அல்லது சிறுத்தையா? என சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி பொது மக்களின் அச்சத்தை போக்கி கால்ந டைகளை காப்பற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.