உள்ளூர் செய்திகள்

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். 

பக்ரீத் பண்டிகையொட்டி நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

Published On 2023-06-29 09:29 GMT   |   Update On 2023-06-29 09:29 GMT
  • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
  • நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்:

இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News