உள்ளூர் செய்திகள்
ஓடை அமைக்கும் பணிகளை நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
கடையநல்லூரில் திட்டப் பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு
- கடையநல்லூர் நகராட்சியில் பிரதான கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி 25-வது வார்டு பஜார் சாலை, பெரிய தெரு, புது தெரு ,அட்டை குளம் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள கழிவு நீர்கள் செல்லும் பிரதான கழிவுநீர் ஓடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனை பார்வையிட்டு ஆய்வு செய்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார். அப்போது நகராட்சி பொறியாளர் லதா , ஒப்பந்ததாரர் ஹாஜா மைதீன் நகர்மன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே கழிப்பிடம் கட்டுவதற்கான இடத்தையும் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பார்வையிட்டார்.