உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

138 அடியை கடந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இடுக்கி மாவட்டத்திற்கு 2-ம் கட்ட எச்சரிக்கை

Published On 2022-11-18 10:57 IST   |   Update On 2022-11-18 10:57:00 IST
  • வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்து விட்டதால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரூல்கர்வ் விதிப்படி முல்லைபெரியாறு அணை யில் வருகிற 20-ந்தேதிவரை 140 வரையிலும், 30-ந்தேதி வரை 142 அடிவரையிலும் தண்ணீரை தேக்கி வைத்து கொள்ளலாம். இதனால் அணையின் நீர்மட்டத்தை சீராக உயர்த்தி நீர்திறப்பை குறைத்து 142 அடிவரை தேக்கி வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள னர்.

இன்று காலை நிலவர ப்படி அணையின் நீர்மட்டம் 138.15 அடியாக உள்ளது. வரத்து 1250 கனஅடி, திறப்பு 667 கனஅடி, இருப்பு 6660 மி.கனஅடி.

வைகைஅணையின் நீர்மட்டம் 69.91 அடியாக உள்ளது. வரத்து 1195 கனஅடி, திறப்பு 1469 கனஅடி, இருப்பு 5802 மி.கனஅடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 132 கனஅடி, சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.44 அடி, வரத்து 86 கனஅடி, இந்த 2 அணை களும் முழுகொள்ளளவை எட்டிவிட்டதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News