உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

135 அடியை நெருங்கிய முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

Published On 2022-10-23 04:22 GMT   |   Update On 2022-10-23 04:22 GMT
  • தற்போது மழை குறைந்தபோதும் அணையின் நீர்மட்டம் 134.85 அடியாக உயர்ந்துள்ளது. மழை கைகொடுக்கும்பட்சத்தில் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • பெரியாறில் மட்டும் 1.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

கூடலூர்:

தொடர் மழை காரணமாக முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேலும் தமிழக பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. தற்போது மழை குறைந்தபோதும் அணையின் நீர்மட்டம் 134.85 அடியாக உயர்ந்துள்ளது. மழை கைகொடுக்கும்பட்சத்தில் 136 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணைக்கு 1474 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக 69 முதல் 70 அடிவரை மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த 71 அடி வரை உயர்த்தப்பட்டு அணையினை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அணைக்கு 1875 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியில் நீடிக்கிறது. 135 கனஅடிநீர் வருகிறது. இதில் 40 கனஅடி பாசனத்திற்கும், 95 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. 136 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 106 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது. பெரியாறில் மட்டும் 1.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.


Tags:    

Similar News