உள்ளூர் செய்திகள்

மழையால் மூழ்கிய வயல்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆய்வு.

கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-12-16 09:21 GMT   |   Update On 2022-12-16 09:21 GMT
  • நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.
  • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் மேஸ்வரபுரம், வீரமாங்குடி, தேவன்குடி ஆகிய கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

மேலும், தேவன்குடி அண்ணாமலை நகர் பகுதியில் சுமார் 20 குடிசை வீடுகளில் மழைநீர் புகுந்ததால், சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டுஉரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், வீரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கனகம், சோமேஸ்வரபுரம் சாந்தி கார்த்திக், விவசாய சங்க தலைவர் விக்ரமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், வேளாண்மை துறை அதிகாரிகளும் உள்ளனர்.

Tags:    

Similar News