உள்ளூர் செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு.

கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-16 09:52 GMT   |   Update On 2022-11-16 09:52 GMT
  • வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை.
  • சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர நடவடிக்கை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கள், காலமாநல்லூர், சின்ன ங்குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பார்வையிட்டு வீடுகளை இழந்த அனைவருக்கும் அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்,

மேலும் சின்னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்நிலைப்பள்ளி சுற்றி குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந்துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவர்களிடம் உறுதியளித்தார்.

அதைத் தொட ர்ந்து கீழையூர், கிடாரங்கொ ண்டான், புன்செய், தலைச்சங்காடு உள்ளிட்ட ஊராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிரு ப்பு பகுதி மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், ஒன்றிய குழு துணைத்தலைவர் மைனர் பாஸ்கர், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News